மண்டைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பருத்தி விளையில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தை பேரூராட்சி நிர்வாகம் நிழற்குடை பராமரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் கொடி நிறத்தில் வர்ணம் பூசப்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளியானது.
இது அப்பகுதியில் மக்களிடம் பயத்தையும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக ஒன்றிய செயலாளர் சந்திரா என்பவர் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். இது குறித்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா சார்பில் பிரமோத் என்பவர் மண்டைக்காடு போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் ஆரஞ்சு நிறம் மற்றும் இளநீலம் நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறத்தை பாரதிய ஜனதா கட்சி நிறம் எனக் கூறி அதை மாற்ற முயற்சி செய்கின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என புகார் அளித்துள்ளார்.