மணவாளகுறிச்சி: விஷ மாத்திரை தின்று மூதாட்டி தற்கொலை

0
117

மணவாளக்குறிச்சி அடுத்த கல்படி பகுதியைச் சேர்ந்தவர் சுயம்பு மனைவி டெய்சி ராணி (65). இவர் அதே பகுதியில் உள்ள மகன் கிங்ஸ் ராஜா என்பவர் வீட்டில் தங்கி உள்ளார். கடந்த சில நாட்களாக டெய்சிராணி வீட்டில் சரியாக உணவு உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்துள்ளார். இதனால் மகன் கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த டெய்சி நேற்று முன்தினம் (ஜூலை 28) தென்னை விஷமாத்திரை உட்கொண்டு குமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று டெய்சி ராணி இறந்தார். மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here