மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் வினோத் (23). தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவ தினம் வினோத் பைக்கில் அம்மாண்டிவிளையில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க சென்றார். மண்டபத்தின் வெளியே பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றவர் பின்னர் திரும்பி வந்தபோது பைக்கை காணவில்லை. திருமண கூட்டத்தில் நின்றவர்கள் யாரோ பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது. மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் பைக்கை திருடிச் சென்ற நபர்களைத் தேடிவருகின்றனர்.