சேரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் பாபுவின் மகள் சரண்யா (22), வெள்ளமோடி தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த மாணவி, நேற்று திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை சுரேஷ்பாபு மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் இன்று (27-ம் தேதி) புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.














