மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த புனிதா (56) என்பவரிடம், அதே பகுதியை சேர்ந்த ஜோன்சிங் (52) மற்றும் அவரது மனைவி டெல்மா (50) ஆகியோர் சுமார் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை கேட்டபோது, ஜோன்சிங் மற்றும் டெல்மா ஆகியோர் புனிதாவை தாக்கியுள்ளனர். காயமடைந்த டெல்மா குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணவாளக்குறிச்சி போலீசார் கணவன்-மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.