
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜன் (37) என்பவரை, அதே பகுதியை சேர்ந்த அஜித், ஷாலினி, அமுதா ஆகிய மூவர் பாதையில் ஸ்கூட்டர் நிறுத்தியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாக்கியுள்ளனர். இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜனுக்கும் அஜித் என்பவருக்கும் இடையே பாதை பிரச்சனை இருந்து வந்துள்ளது. நேற்று அமுதா பிரச்சனைக்குரிய பாதையில் ஸ்கூட்டரை நிறுத்தியபோது ராஜன் ஓரமாக நிறுத்த கூறியதால் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.













