கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் ஆத்மீக சுடரொளி மஹான் மாலிக் முஹம்மது ஸாஹிப் வலியுல்லாஹ் (ர.அ) அவர்களின் ஆண்டுவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அழகியமண்டபம் புஹாரியா பள்ளிவாசலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட கொடி, திருவிதாங்கோடு மஹான் மாலிக் முஹம்மது ஸாஹிப் பள்ளிவாசலில் ஏற்றப்பட்டது. திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாஅத் செயலாளர் செய்யது முஹம்மது அஸ்லம் தலைமை தாங்கினார், ஜமாஅத் தலைவர் அன்வர் ஹுசைன் கொடி ஏற்றினார்.