குழித்துறை நகராட்சிக்குட்பட்ட இடவிளாகம் ரயில்வே பாதை அருகே குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நேற்று குழித்துறை நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மெகா தூய்மைப் பணியை மேற்கொண்டன. நகராட்சி தலைவர் பொன் ஆசை தம்பி துவக்கி வைத்த இந்த பணியில் 400 பணியாளர்கள் பங்கேற்றனர். இனி அப்பகுதிகளில் குப்பை கொட்டக்கூடாது என நகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.