குழித்துறை நகராட்சி, கழுவன்திட்டை பகுதியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டப் பணிகளுக்குப் பிறகு மீதமிருந்த ஏராளமான பிவிசி பைப்புகள் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகின. குழித்துறை தீயணைப்பு நிலைய அதிகாரி சந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.