முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, குழித்துறையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால் சிங் தலைமையில் இன்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேல்புறம் வட்டார தலைவர் ரவிசங்கர், மாநில பொதுச் செயலாளர்கள் பால்ராஜ், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் டாக்டர். தம்பி விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் போது தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.














