மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மாவின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து, குழித்துறையில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளருமான நிவேதித் ஆல்வா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். விஜய் வசந்த் எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் பிரின்ஸ், தாரகை கத்பட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.












