மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து மேல்புறம் வட்டார ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கேதன் சார்பாக குழித்துறையை அடுத்த கழுவன் திட்டையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. வட்டார சங்கேதன் தலைவர் பிபின் தங்ககுமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் தொடங்கி வைத்து பேசினார். குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர். பினுலால் சிங் சிறப்புரையாற்றி போராட்டத்தை முடித்து வைத்தார்.














