மார்த்தாண்டத்தில் இருந்து குழித்துறைக்கு நேற்று மாலை சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்த குழித்துறை பகுதியைச் சேர்ந்த பார்வதி (64) என்பவர், வாவுபலி பொருட்காட்சி திடல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயின் திருடு போனது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.











