மார்த்தாண்டம் மேம்பாலம் பகுதியில் இருசக்கர வாகனங்களில் சென்ற நான்கு இளைஞர்கள், அவ்வழியாகச் சென்றவர்களிடமும் பெண்களிடமும் ஆபாச சைகை செய்துள்ளனர். இதை இளைஞர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டார். இந்த வீடியோ பரவலானதை அடுத்து, குமரி எஸ்.பி. ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிட்டார். மனோஜ் ராஜ் (23) மற்றும் ஆசிக் (19) ஆகிய இருவரை மார்த்தாண்டம் போலீசார் நேற்று கைது செய்தனர். மற்ற இருவரும் வெளியூர் சென்றது தெரியவந்துள்ளது. கைதான இருவரும் தங்கள் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோரிய வீடியோவை வெளியிட்டனர். இதையடுத்து, அவர்களை மன்னித்து காவல்துறை விடுவித்தது.














