மணவாளக்குறிச்சி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த கட்டிட தொழிலாளி ராஜேந்திரன் (49), மது பாட்டிலை பீரோவில் மறைத்து வைத்திருந்தார். அவரது மகள் அதை ஊற்றியதால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி அகிலா அளித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.