Home கன்னியாகுமரி செய்திகள் குமரியில்: பெண் கடத்தல்; 15 பேர் மீது வழக்கு

குமரியில்: பெண் கடத்தல்; 15 பேர் மீது வழக்கு

0

குமாரகோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் ஆகாஷ் என்பவருக்கும், அதே கல்லூரியில் படிக்கும் களியக்காவிளை மாணவி ஒருவருக்கும் ஏற்பட்ட காதல் விவகாரத்தில், மாணவி ஆகாஷ் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், களியக்காவிளையை சேர்ந்த சுராபுதீன், ஜாஸ்மின் மற்றும் மேலும் 13 பேர் கொண்ட கும்பல் ஆகாஷ் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கி, மாணவியை கடத்திச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஆகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version