குமரி மேற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி நேர்காணல்

0
241

குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோ தங்கராஜ் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: – தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு பொறியியல் துறையில், மாநில அளவில் திமுக பொறியாளர் அணியை வழிப்படுத்தும் வகையில் உறுப்பினர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டது. 

அதன் அடிப்படையில் பொறியாளர் அணி சார்பில் கியூ ஆர் கோடு மூலமாக மாவட்ட வாரியாக நிர்வாகிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. குமரி மேற்கு மாவட்ட ஒன்றியம், நகரம், பேருர் அளவில் பொறியாளர் அணிக்கு நிர்வாகிகளை தேர்வு செய்யும் வகையில் கியூ ஆர் கோடு மூலமாக விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல், வருகிற 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அழகிய மண்டபத்தில் உள்ள மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. 

ஆகவே பொறியாளர் அணி நிர்வாக பொறுப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள பொறியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பொறுப்புகளை பெற்று சிறப்பாக செயலாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here