கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி, நேற்று (15-03-2026) கன்னியாகுமரி வருகை தந்த தென் இந்தியாவிற்கான சென்னை ஆஸ்திரேலிய துணைத் தூதரகத்தின் தூதர் சிலாய் ஷாகி மற்றும் துணைத் தூதரக அதிகாரி கத்ரீனா நாப் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த சந்திப்பின் போது, கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா தலங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன.














