குமரி: பாரம்பரியமிக்க சிவாலய ஓட்டம் இன்று காலை துவங்கியது

0
197

குமரி மாவட்ட பகுதிகளில் சிவராத்திரியை முன்னிட்டு, 12 சிவ ஆலயங்களை சுமார் 110 கிலோ மீட்டர் தூரம், காவி வேட்டி துண்டு அணிந்து கையில் விசிறியுடன் பக்தர்கள் ஓடியே தரிசிக்கும் பாரம்பரிய முறை நடைபெற்று வருகிறது. நாளை சிவராத்திரி விழாவை முன்னிட்டு 7 நாட்கள் விரதமிருந்த சிவ பக்தர்கள் இன்று 14-ம் தேதி காலை புதுக்கடை அருகே உள்ள முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து ஓட்டத்தை துவங்கினர். இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் நாளை இரவு வரை கலந்து கொள்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here