தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று 6ம் தேதி குமரி மாவட்டம் வருகை தருகிறார். குலசேகரத்தில் மினி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடும் அவர், பின்னர் இறச்ச குளத்தில் அம்பேத்கார் முழு உருவ சிலையை திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து குளச்சலில் கலைஞர் நூலகத்தையும் அவர் திறந்து வைக்கிறார். குமரி மாவட்டத்திற்கு வரும் அவருக்கு நாகர்கோவிலில் மாநகராட்சி மேயர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.














