கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, கன்னியாகுமரியிலிருந்து சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு நேற்று 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 8 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெளியூர் திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக இந்த கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
