பைங்குளம் பகுதியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் அனீஸ், தனது 2வது திருமண நாளுக்காக விடுமுறையில் காஷ்மீரிலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இதனிடையே, அவரது மனைவி சிந்து (25) நேற்று முன்தினம் இரவு திடீரென விஷம் குடித்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிந்துவின் உடல் இன்று குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.