குமரி மாவட்டத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மலையாள ஆதிக்கத்திலிருந்து மீட்க குமரித்தந்தை மார்சல் நேசமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 1954 ஆகஸ்ட் 11 அன்று மார்த்தாண்டம், புதுக்கடை பகுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 11 தமிழர்கள் வீரமரணமடைந்தனர். இந்த தியாகிகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் புதுக்கடை, மங்காடு தியாகிகள் நினைவு ஸ்தூபிகளில் நேற்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.














