கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கட்டுமானம், தையல், ஆட்டோ உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களின் நிலுவையில் உள்ள பணப் பயன் மனுக்களை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.