திருவட்டாறு அருகே காங்கரை, இடிச்சக்கபிலாமூடு பகுதியில் இருந்த பழைய போலீஸ் குடியிருப்பு மூடப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு முன்பு திருவட்டாறில் புதிய குடியிருப்பு கட்டப்பட்டது. தற்போது காங்கரை குடியிருப்பு பாழடைந்து விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, பாழடைந்த போலீஸ் குடியிருப்பு கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
