வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த, மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் கண் பார்வையற்ற செல்வகுமாரியை கவனிக்க யாரும் இல்லாததால், காவல்துறையின் உதவியை நாடினர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவித்த நிமிர் திட்ட குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு, அவரை மீட்டு முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர். குமரி மாவட்ட காவல்துறையின் நிமிர் குழுவினர் இது போன்ற பல உதவிகளைச் செய்து வருகின்றனர்.














