பார்வதிபுரம் பகுதியில் சாலையோரத்தில் யாசகம் செய்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 45 வயதுடைய நபர் குறித்து பொதுமக்கள் ‘நிமிர்’ மீட்புக் குழுவுக்கு தகவல் அளித்தனர். மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த நபரை மீட்டனர். அவரது சொந்த ஊர் மற்றும் குடும்ப விவரங்கள் தெரியவில்லை. மீட்கப்பட்ட நபரை தூய்மைப்படுத்தி, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு, மறுவாழ்வு மையத்தில் நேற்று சேர்த்தனர்.














