கிள்ளியூர், கோழிவிளை இலங்கை தமிழர்கள் குடியிருப்பு மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் ஸ்ரீகாந்த் (12), கோவாவில் நடைபெற்ற 5-வது இளையோர் தேசிய ஹாக்கி போட்டியில் 2-வது இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். அவரது வீட்டிற்கு நேற்று நேரில் சென்ற தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார், மாணவர் ஸ்ரீகாந்த்திற்கு ரூ. 10,000 ரொக்கப் பரிசளித்து பாராட்டினார்.














