கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரலூரில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழா கலை நிகழ்ச்சியின் போது நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறால் போலீசார் நிகழ்ச்சிகளை ரத்து செய்து அனைவரையும் கலைந்து செல்ல உத்தரவிட்டனர். பின்னர், ரமேஷ் என்ற இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மணிகண்டன் என்ற மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கோட்டாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














