கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் மக்கள் மருந்தகத்தில் ஜன் அவுஷதி தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் விஜயகுமார், மக்கள் மருந்தகம் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்து, தரமான உயிர்காக்கும் மருந்துகளை குறைந்த விலையில் வழங்கி மக்களுக்கு பெரும் நன்மை செய்து வருவதாக தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்ட இந்திய ரெட் கிராஸ் சங்கத்தின் தலைவர் டாக்டர் குமாரதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.














