இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ பணியாளர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச சட்ட உதவி மற்றும் ஆதரவை வழங்கும் ‘நல்சா வீர் பரிவார் சஹாயத யோஜனா’ என்ற புதிய தேசிய சட்ட சேவை நாளை (புதன்கிழமை) நாகர்கோவில் கோட்டாரில் உள்ள முன்னாள் படை வீரர் நலத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் தொடங்கப்படுகிறது. குமரி மாவட்ட முதன்மை நீதிபதி முன்னிலையில் மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.