கேரள மாநிலத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் இருந்து படந்தாலுமூடு வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் இன்று (7-ம் தேதி) நடைபெற்றது. கன்னியாகுமாரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் மத்திய ரிசர்வ் போலீசார், மாநில போலீசார், ஊர்க்காவல் படையினர் என 250க்கும் மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.














