கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த மழையால், குழித்துறை அரசு மருத்துவமனையின் கழிவு நீர், மீன் மார்க்கெட்டில் உள்ள கழிவுகள் ஆகியவை தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது. தாமிரபரணி ஆற்றுநீரை பல வீடுகள் கிணறுகள் வாயிலாக குடிநீராக பயன்படுத்துவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.