குமரி – கேரளா எல்லைப் பகுதியான களியக்காவிளையில் கோகுல், கெளதம் என்ற பெயர்களில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனங்களின் உரிமையாளர் ஜெய்சேகர், சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.














