பழவிளை மின்வாரியம் சார்பில் இன்று மின்கம்பங்கள் நடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின் ஒயரில் கம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கி முத்துபாலன் (22) என்ற ஒப்பந்த பணியாளர் உயிரிழந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மின்வாரிய பணியாளர்கள் உட்பட 7 பேர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.
