குமரி: கல்லூரி மாணவிகளின் தேர்தல் விழிப்புணர்வு ஓவியம்

0
15

குமரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, சுங்கான்கடை ஸ்ரீ ஐயப்பா மகளிர் கல்லூரியின் 10 மாணவிகள் கொண்ட குழுவினர் தக்கலை பேருந்து நிலையத்தில் நேற்று சுவர் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா இந்த ஓவியப் பணியைத் தொடங்கி வைத்தார். ஓவியக் கலைஞர் அனிஷ் மேற்பார்வையிலும், பேராசிரியர்களின் ஒருங்கிணைப்பிலும் மாணவிகள் இந்த ஓவியங்களை வரைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here