தடிக்காரன்கோணம் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நேற்று ஒரு மினி மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அழகு மீனா இந்த ஓட்டத்தை தடிக்காரக்கோணத்தில் துவக்கி வைத்தார். பூதப்பாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது. தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.














