குழித்துறை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் போதையில் வந்த நபர், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களைத் தாக்கி ரகளையில் ஈடுபட்டார். இது தொடர்பாக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கடையல் பிலாந்தோட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் குமார் (35) நேற்று கைது செய்யப்பட்டார்.














