கன்னியாகுமாரி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து ஓட்டுநர் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த தாணு பிள்ளை (62) நேற்று படந்தாலுமூடு பகுதியில் பேருந்து நிறுத்தும் இடத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 108 ஆம்புலன்ஸ் மூலம் பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. களியக்காவிளை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.