குமரி:  கொள்ளையரை பிடித்த தனிப்படை போலீசை பாராட்டிய டிஜிபி

0
261

திருவட்டார் அருகே உள்ள வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் தாஸ் (58). தொழிலதிபரான இவர் வீட்டில் கடந்த ஜூலை மாதம் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளைகள் புகுந்து மோகன் தாஸ் மற்றும் அவரது மகளை தாக்கி விட்டு 79 பவுன் தங்கநகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியோடினர்.  

இது தொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குமரி எஸ் பி சுந்தர வதனம் உத்தரவின் பேரில் 4 தனிப்படையினர்  விசாரணை நடத்தி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் அனுகுமார் (34),  விருதுநகர் சிவகாசியை சேர்ந்த பார்த்திபன் (23), திருப்பூர் சுப்பிரமணியன் (38) ஆகியோரை போலீசார் கடந்த 23ஆம் தேதி கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் திறம்பட செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்துள்ள குமரி மாவட்ட தனி படை போலீசாரை தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் வரவழைத்து பாராட்டி வெகுமதிகள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here