மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன், குறுமத்தூர் புரடியூசர் கம்பெனியின் தொழில் முனைவோருக்கான இரண்டாம் கட்ட மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று குழித்துறையில் தொடங்கியது. கேடர் இந்தியா நிர்வாக இயக்குனர் மோகன் குமார் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நாகர்கோவில் அலுவலக துணை இயக்குனர் வீணா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சியின் சிறப்புகள் குறித்து பேசினார். பேராசிரியர் எபி தோமஸ் பயிற்சி அளித்தார். இப்பயிற்சி தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.














