கன்னியாகுமரி மாவட்டம் ஞாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக 6000க்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, ஞாலம் சென்று சூறைக்காற்றினால் சேதமடைந்த வாழைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகளின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.














