குமரி மாவட்டம் சுருளோடு மலைப் பகுதியில் அமைச்சர் மனோ தங்கராஜ் 360 மீட்டர் உயரத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பில் தியான மண்டபம் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், வேளிமலை வள்ளி சுனை மலையில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கிறிஸ்தவ மத அடையாளத்தை அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கிறிஸ்தவ அடையாளங்களை நிறுவ துணை போவதாக அமைச்சர் மனோ தங்கராஜை கண்டித்து, குமரி மாவட்டத்திற்கு வரும் 24-ம் தேதி தமிழக முதல்வர் வருகையின் போது கருப்பு கொடி காட்டப் போவதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது.














