குழித்துறை தபால் நிலையம் சந்திப்பு பகுதியை சேர்ந்த 52 வயதான கோபகுமார், தமிழக இந்து அறநிலை துறையின் ஊழியராக குழித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்றுவிட்டு திரும்பும் போது அமரவிளை பகுதியில் விபத்தில் சிக்கி, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














