இரவிபுத்தன்துறை பகுதியைச் சேர்ந்த மேரி சந்திரிகா (39) என்பவரின் வீட்டில், சொத்து தகராறு காரணமாக பக்கத்து வீட்டில் வசிக்கும் சூசை அடிமை, அவரது மனைவி சபிதா, மகன் சுபின் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கதவை உடைத்து புகுந்து மேரி சந்திரிகாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த மேரி சந்திரிகா குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நித்திரவிளை போலீசார் சூசை அடிமை உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.














