திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக கவுன்சிலர் குணசீலன் (52) வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 27 டெட்டனேட்டர்கள் மற்றும் 30 ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலை விற்பனை தொடர்பாக போலீஸார் சோதனை செய்தபோது இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பாக குணசீலன் மற்றும் ராஜன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
