புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதியைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி தர்ஷனா, வீட்டில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தாய் விஜிலா புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
