குலசேகரம், சுருளக்கோடு பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக சுரேஷ் (42) என்பவர், செந்தில் (41) என்பவரை வெட்டு கத்தியால் தலையில் வெட்டினார். இது தொடர்பாக குலசேகரம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். பத்மநாபபுரம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், நேற்று (மார்ச் 11) நீதிபதி சுரேஷுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.














