நேற்று அதிகாலை விண்ணூர் பழஞ்சி வீட்டை சேர்ந்த உஷா (50) சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மறைந்திருந்த மர்ம திருடன் அவரது கழுத்தில் இருந்த தங்க தாலிக் செயினை அறுத்துக்கொண்டு தப்பி ஓடினான். தாலியின் ஒரு பகுதி திருடன் கையில் சிக்க, மீதி உஷாவிடம் கிடைத்தது. இது குறித்து களியக்காவிளை போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.