திருவட்டார் அருகே ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜிஷோ நிதி (31), டெல்லியில் 14ஆம் தேதி முதல் நடைபெற்ற வாள்வீச்சுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் புனேயில் ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார். வாள்வீச்சுப் போட்டியில் பல தேசியப் பதக்கங்களை வென்றுள்ள இவர், 2009 முதல் தொடர்ந்து தேசிய வாள்வீச்சுப் போட்டியில் பதக்கம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவரை சக ராணுவ வீரர்கள், குமரி விளையாட்டு வீரர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்தியுள்ளனர்.














